• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டி ! – பதக்கங்களை வென்ற மாணவ மாணவிகள்

October 3, 2021 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மாநில அளவிலான அனைத்து வகையான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. ராஜா எம்.எம்.ஏ அகாடமி கிராண்ட் மாஸ்டர் ராஜா சார்பாக நடைபெற்ற இதில் திருப்பூர் ஈரோடு சென்னை தேனி நாமக்கல் கரூர் கோபி உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த தற்காப்பு கலை போட்டியில் முல்லை ஸ்போர்ட்ஸ் அகடாமி முதலாவது ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

இரண்டாவதாக ஆன்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமியும், மூன்றாவதாக ஃபயர் டிராகன் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் பதங்ககங்களை தட்டி சென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானவேல் ராஜா, தங்கம் ஷாப்பிங் மால் சேர்மன் தங்கவேல், AMP மற்றும் காஃபி ரெடி நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மாணவ மாணவியர், பெற்றோர் உட்பட அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க