• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற மாநகராட்சி சுகாதாரக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

June 23, 2022 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற மாநகராட்சி சுகாதாரக்குழு கூட்டத்தில் ஆயுர்வேதிக், சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25 லட்சம் தொகை வழங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தி்ல் சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் சுகாதாரக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் துணை சுகாதார அலுவலர் வசந்த் திவாகர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தூய்மையான மாநகராட்சியாக கோவை மாநகராட்சியை மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, பொது சுகாதாரப்பிரிவு சார்பாக தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இதில் கோவை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக வார்டு பகுதிகளில் கொரோனா பணிகள் மேற்கொள்ளும் மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாகனங்கள், மாதாந்திர வாடகை அடிப்படையில் நியமனம் செய்வது, 3 ஆயுர்வேதிக் மற்றும் 2 சித்தா மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கு ரூ.25 லட்சம் தொகையை வழங்க அனுமதி அளித்தல்,மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளுக்கும் டெங்கு, மலேரியா, ஜிகா வைரஸ் போன்ற நோய்களை பரப்பும் கொசுப்புழுக்களை அழிக்க பேசில்லஸ் துரஞ்சியன்ஸ், அபேட்பைரத்திரம் மற்றும் மாலத்தியான் மருந்துகள் வாங்குதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் சுகாதாரக்குழு கூட்டத்தில் மேற்கொண்ட ஆலோசனைகள், எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் தொடர்பாக சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் படிக்க