October 25, 2025
தண்டோரா குழு
தற்போது தொழிலில் யாரெல்லாம், எப்படி எல்லாம் முன்னேற்றம் அடைந்துள்ளனர்; அவர்கள் எப்படி வெற்றி பெற்றனர் என அறிந்து கொள்ள விரும்பும் சாதிக்க விரும்பும் தொழில் முனைவோருக்கான மாபெரும் நிகழ்ச்சியை, மிஸ்ஸன் மில்லியனர் கிளப் கோவையில் இன்று நடத்தியது.
தொழில் முனைவோர், எப்படி ஒரு தொழிலை துவங்குவது, அதை எவ்வாறு வளர்ச்சி பெறச் செய்வது மற்றும் எப்படி மாபெரும் நிறுவனமாக மாற்றுவது என புரிந்து கொள்ள வழிகாட்டும் நிகழ்ச்சியாக இது திகழ்ந்தது.
தொழில் நகரமான கோவையில், எப்படியெல்லாம் தொழிலில் பலர் முன்னேற்றம் அடைந்தனர், அவர்களது அயராது உழைப்பு, செயல்திறன், வகுத்த திட்டங்கள் எல்லாவற்றையும் விளக்கினர். வெளிப்படையாக தங்களது வெற்றியை சொல்லும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. அக்டோபர் 25-ல் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றோர், புதிய தொழிலை தொடங்கவும், தற்போதுள்ள தொழிலில் பன்மடங்கு வளர்ச்சி காணவும் பயனுள்ளதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இந்நிகழ்வில் தொழில் முனைவோர் மட்டுமின்றி, தன்னம்பிக்கை பேச்சாளர்களான சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சார்லஸ் காட்வின் மற்றும் சி கே குமரவேல் (நேச்சுரல்ஸ் ஸ்பா) தங்கமயில் ஜுவல்லரி நிறுவனர், அணில் சேமியா நிறுவனர் திரு சுகுமார் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவின் முக்கிய நிகழ்வாக ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் திரு ஸ்ரீ சசிகுமார் எழுதிய அற்புதங்கள் படைக்கும் மில்லியனர் மனநிலை என்ற தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை ஸ்ரீ சசிகுமார் வெளியிட சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பெற்றுக்கொண்டார்.
கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நாள் முழுவதும் நடந்த நிகழ்வில் பலர் பங்கேற்று பயன் பெற்றார்கள்.