October 2, 2025
தண்டோரா குழு
கோவையில் செயல்பட்டு வரும் கீர்த்தனை மகிமை அறக்கட்டளை சார்பாக தென்னிந்திய திருச்சபைகளில் பாடப்படும் கிறிஸ்தவக்கீர்த்தனைகளுக்கு அதினதின் இராகம்,தாளம்,கர்நாடக இசைவழியில் பயிற்சி கொடுத்து பாடவைத்து அதைப்பற்றி பரப்பச் செய்து பாராட்டுவதே முக்கிய சிறப்பம்சமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற கிறிஸ்தவ கீர்த்தனை பெருவிழா துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மார்டின் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலரும், மார்டின் குழுமங்களின் இயக்குனருமான லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
கோவை திருச்சி சாலை சி.எஸ்.ஐ.கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில், சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.இதில் ஆயர் ராஜேந்திரகுமார்,பிரின்ஸ் மேத்யூ,ஜாஸ்மின் குணசிங்,ஜான்சன்,வில்லியம்ஸ்,பராமனந்தம்,முத்து செல்வன்,வில்பிரட் பால்,அனிதா ஜெயராஜ்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கோவை உட்பட பல பகுதியில் இருந்து வந்து கிறிஸ்தவ பாடல்களை குழுவினர் பாடினர்.