December 21, 2022
தண்டோரா குழு
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக கோவையில் ஓய்வூதியம் சொத்துரிமை எனும் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக ஓய்வூதியர் தின விழா வடகோவை மாநகராட்சி ராமலிங்க மண்டப அரங்கில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பலராமன் தலைமையில் நடைபெற்ற இதில்,துணை தலைவர் ராமசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக,மாநில தலைவர் கங்காதரன் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பலராமன்,தற்போதையை அரசு தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட படி புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மத்திய அரசு வழங்கியது போல் அகவிலை இப்படியை உரிய தேதியில் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.
விழாவில் உயிரின் சுவாசம் அறக்கட்டளை நிறுவனரும்,ராயல் கேர் மருத்துவமனை தலைவருமான மருத்துவர் மாதேஸ்வரன், சமூக கொடையாளர் ஓய்வு பெற்ற அலுவலர் கிருஷ்ணன்,ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் முகமது சிங்காரவேலு வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.