• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

February 13, 2021 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மாநாட்டில்,வீட்டு மனைப் பிரிவுகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யும் நடைமுறை யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையை அரசு அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் எழுச்சி தின மாநாடு,முப்பெரும் விழா கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.மாநில அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில் நடைபெற்ற இதில்,தேசிய ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார்,மற்றும் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்ற இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில ஆணையர் பிரதாப் குமார்,அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்,முன்னால் காவல்துறை கூடுதல் தலைவர் காமராஜா,மற்றும் பன்னாட்டு அரிமா சங்கத்தின் ஆளுநர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கோவை உட்பட மதுரை, சேலம், புதுவை என பல்வேறு இடங்களை சேர்ந்த ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். மாநாட்டு விழாவில், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பிரச்னைகள் குறித்து மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில்,புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து சிறந்த சுற்றுலா நிறுவன விருதாக சென்னையை சேர்ந்த லா அலெக்ரியா நிறுவன இயக்குனர் திருமுருகனுக்கு விருது வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி பேசுகையில்,

மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் உள்ள விதிகளை தளர்வு செய்ய வேண்டும் எனவும்,மேலும் சிறப்பு வரன் முறை திட்டத்தை ஓராண்டு காலத்திற்கு நீட்டிப்பு செய்து தர வேண்டும்,தற்போதைய சூழலில் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை மேலும் வளர்ச்சி அடையவும் எழுச்சி பெறவும் தமிழக அரசு உடனடியாக பதிவுத்துறையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தை பாதியாக குறைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் மனை மற்றும் கட்டட திட்ட அனுமதி நிலவகைபாடு மாற்றம், தடையின்மைச் சான்று கோரி விண்ணப்பிக்கும் இடங்கள் என அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து ஒற்றைச் சாளர முறையை கொண்டு வந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு தலையிட்டு கட்டுபடுத்த முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க