February 28, 2020
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் 9 வது நாளாக NRC CAA,NPR, சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் , இந்த போராட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் “கோவையின் ஷாகின் பாஃக்” என்ற பெயரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த காத்திருப்பு போராட்டம் 9 வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் ,
இன்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட கிறிஸ்த்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
9 வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், எதிர்ப்புப் பதாகைகளை கையில் ஏந்தியும் இரவு நேரத்திலும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.