• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் – ஜிவி பிரகாஷ் குமார் !

May 23, 2023 தண்டோரா குழு

கோவையில் எம்.கே என்டர்டைன்மென்ட் வழங்கும் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் முதல் நேரடி இசை நிகழ்ச்சி மே 27ல் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது.

உலகளவில் முதன்முறையாக கோவையில் பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நேரடி மாபெரும் இசை நிகழ்ச்சி மே 27ல் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சி குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் எம்.கே என்டர்டைன்மென்ட் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் கூறுகையில் ஆகியோர் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த னர்.

அப்போது பேசிய எம்.கே என்டர்டைன்மென்ட் நிர்வாக இயக்குனர் மணிகண்டன்,

கோவையில் வரும் மே 27ஆம் தேதி பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இசை கச்சேரி கொடிசியா மைதானத்தில் மாலை 6:00 மணி முதல் பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம்.எம்.கே. என்டர்டெயின்மென்ட்,அன்னபூர்ணா மசாலா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த நேரடி இசை நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்த உள்ளோம் என்றார்.

ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், ஹரிணி,சைந்தவி, திப்பு திவாகர், சத்திய பிரகாஷ்,வேல்முருகன், மற்றும் பலர் பாட உள்ளனர்.பிரபல நடன இயக்குனர் சன்டி குழுவினர் நடனமாடுகின்றனர்.இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்,தெலுங்கு,இந்தி,மலையாளம்,கன்னடம், ஆகிய மொழிகளில் இருந்து முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் கூறுகையில்,

முதல் லைவ் நிகழ்ச்சி கோவையில் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.2006″ல் இருந்து இசை அமைத்து வருகிறேன்.கோவையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி சிறப்பான நிகழ்வாக இருக்கும். ரெக்கார்டிங்கில் இருந்து நேரடியாக இசையமைப்பது எதிர்பார்பாக உள்ளது. இந்த நிகழ்வில் 40-45 பாடல்கள் பாடப்பட உள்ளன. லைவ்வில் சினிமாவில் கேட்டதை விட சிறப்பு இருக்கும். அதிகபட்சமாக தமிழ் பாடல்கள் பாடுவோம் ,என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பே.டி.எம் இன்சைடர், ஸ்போர்பி மற்றும் புக் மை ஷோ செயலிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிக்கெட் தொடர்பான விவரங்களுக்கு:- 7826836672 / 7826836670

மேலும் படிக்க