• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த டெம்போ டிராவலர்

January 20, 2020

கோவையில் நடுரோட்டில் டெம்போ டிராவலர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அவினாசி சாலையில் பீளமேடு அருகே இன்று மாலை டெம்போ டிராவலர் சென்று கொண்டிருந்தது. வாகனம் பீளமேட்டை அடுத்த பன்மால் அருகே சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் முன்புறம் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகனத்தின் ஓட்டுநர், சாலையோரம் நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கினார். சில நிமிடங்களில் வாகனம் முழுவதும் தீ பரவத்தொடங்கியது.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், வண்டி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. கோவையில் நடு ரோட்டில் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க