April 7, 2021
தண்டோரா குழு
கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதையடுத்து, நேற்று தெற்கு தொகுதிக்குட்ட பல்வேறு வாக்குச்சாவடிக்கு மகள் ஸ்ருதிஹாசனுடன் சென்றார்.
இந்நிலையில், கோவையில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.அதில்,
வாக்குசாவடிக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர பிறர் செல்ல கூடாது என்ற நிலையில் ,கோவை தெற்கு தொகுதி வாக்குசாவடிகளுக்குள் கமலுடன், ஸ்ருதிஹாசன் சென்றது விதிமீறல் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.