June 22, 2018
தண்டோரா குழு
கோவையில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கப்பட்டது.
நடிகர் விஜய் அவர்களின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள மாநகர விஜய் மன்றத்தின் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விஜய் மன்றத்தின் மாநகர தலைவர் பாபு தலைமையில்,மாவட்ட தலைவர் சம்பத்குமார் முன்னிலையில மன்ற நிர்வாகிகள் சுமார் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று முழுவதும் கோவை மாவட்டம் மன்றங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.