December 20, 2021
தண்டோரா குழு
பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் கோவையில் இண்டிகோ டீ வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு சிறு, குறு & நடுத்தர தொழில் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 20 நடமாடும் டீ விற்பனை கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 15ம் தேதி துவக்கி வைத்தார்.பழங்குடி மக்கள் & இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடமாடும் டீ விற்பனை கடைகள் முதற்கட்டமாக சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த இண்டிகோ நடமாடும் வாகனம் இன்று கோவை வந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.