• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடந்த புதுவித திருமணம்

April 26, 2018 தண்டோரா குழு

உடல் உறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற திருமணத்தில் பலரையும் உடல் உறுப்பு தானம் அளிக்கும் வகையில் புதிய முயற்சியில் புதுமணதம்பதியினர் ஈடுபட்டனர்.

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலதிபரான இமயவன் அஞ்சுகம் என்பவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தன்னார்வதொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல்உறுப்புதானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரங்கு அமைக்க திருமணவீட்டாரின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடல்உறுப்புதானம் குறித்து கேட்டறித்ததுடன் உடல்உறுப்புதானம் செய்யபதிவு செய்து கொண்டனர்.திருமண விழாக்களில் உறவுகளையும்,நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவதோடு மட்டுமில்லாமல் உடல்உறுப்புதானம் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருமணவிழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

இது போன்று அனைத்து விஷேச நிகழ்வுகளிலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால் உடல் உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் தங்கள் இல்லங்களில் நடக்கும் விழாக்களிலும் இது போல உடல் உறுப்புதான நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் திருமணவிழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

திருமணம் போன்ற விழாக்களில் இறப்புபற்றி பேசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் எனவும்,ஆனால் இந்த திருமண வரவேற்பு விழாவில் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

உடல்உறுப்புதானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திருமணபத்திரிகை கொடுக்கும்போதே இது போன்ற உடல்உறுப்புதான நிகழ்ச்சி நடைபெறுவது குறித்தும் தெரிவித்துள்ளனர். குடும்ப விழாக்களில் இது போன்ற நிகழ்வுகள் நடத்தும்போது அறியாமை உடைந்து விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காகவே தங்கள் திருமண வரவேற்பில் இதற்கான ஏற்பாடுகளை தம்பதியினர் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க