• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 74.81 சதவீதம் வாக்குகள் பதிவு

July 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நேற்று 1 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தமிழக மாநில தேர்தல் ஆணையத்தால் நேர்தல் நடத்தப்பட்டது. இதில் 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 1 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு நேர்வாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குப்பதிவு செய்ய பாதுகாப்பு உபகரணங்களுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 வாக்குச்சாவடிகளில் 74.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைநியாக நல்ல முறையில் நடைபெற்றது. பதிவான வாக்குகளின் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் உரிய காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க