• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடந்த உலக மாணவர் தொழில்முனைவோர் விருதுகளுக்கான இறுதிப்போட்டி

February 8, 2020

உலக மாணவர் தொழில்முனைவோர் விருதுகளுக்கான இறுதிப்போட்டி கோவையில் நடந்தது.

தொழில் முனைவோர் அமைப்பு சார்பில், உலக மாணவர் தொழில் முனைவோர் விருதுகளுக்கான தேசிய இறுதிப்போட்டி மற்றும் தொழில் முனைவோர் கோ கெட்டர் உச்சி மாநாடு கோவையில் 2 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 23 பேர் தேசிய அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர்.

இதுகுறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தொழில்முனைவோர் கோயம்புத்தூர் கிளையின் தலைவர் ரஜினிகாந்த், ஜி.எஸ்.இ.ஏ தலைவர் சிவ பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில்,

உலக மாணவர் தொழில்முனைவோர் விருதுக்கான இறுதிப் போட்டியில் 23 பேர் போட்டியிட்டனர். இதில் சென்னை, கோவையில் இருந்து 3 பேர் போட்டியிட்டனர். இதில் 10 முதல் 15 நிமிடம் வரை அவர்களது தொழில் குறித்து பேச வேண்டும். இதனை 12 நீதிபதிகள் கொண்ட குழுவினர் பார்வையிட்டு, இறுதிகட்ட போட்டியாளரை தேர்ந்தெடுப்பார்கள். இன்று மாலை 23 பேரில் இருந்து 5 பேருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் இருந்து 3 பேர் தேர்ந்தெடுத்தார்கள். இதில் முதலாவது இடத்தைப் பிடிப்பவர் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெறும் உலக இறுதி போட்டியில் கலந்து கொள்வார். இந்த போட்டியில் 52 நாடுகளில் இருந்து ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே இறுதி போட்டியாளர்கள் என்ற வீதத்தில் பங்கேற்பார்கள். இதில் முதலிடம் பிடிப்பவர் 15,000 டாலர் பரிசுத் தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெறுவார். இந்த போட்டியில் பங்கேற்க கல்லூரிகளில் படித்துக் கொண்டு, தொழில்முனைவோராக இருப்பவர்கள் இதில் பங்கேற்க முடியும். அவர்களது தொழில்களில் உள்ள சிரமங்களையும், அந்தத் தொழிலில் அவர்கள் சிறந்து விளங்கவும், தொழிலில் சிறந்து விளங்குவதற்கான ஊக்கத்தை அளிக்கும் வகையிலும் இந்த போட்டிகள் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர். தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு உத்திகளையும்,ஆலோசனைகளையும் தொழில் முனைவோர் சங்கம் வழங்கி வருவதாக தெரிவித்தனர்.

பேட்டியின்போது தொழில் முனைவோர்கள் தெற்காசியாவில் உறுப்பினர்களுக்கான இயக்குனர் ஜெயேந்திர ஜெயச்சந்திரன், தெற்காசிய நிபுணர்களான பியூஷ் பண்டாரி, பிரதீக் கோயல், கோயம்புத்தூர் மற்றும் தலைவர் சூரத் சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க