March 7, 2018
தண்டோரா குழு
கோவையில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்,மத்திய அரசின் சிறு மற்றும் குறு தொழில் விரிவாக்க மையத்தில் இன்று(மார்ச் 7)நடைபெற்றது.
மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் புரிவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் விரிவாக்க மையத்தின் சார்பாக நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் சர்வதேச சந்தைப்படுத்துதல்,ஏற்றுமதி பேக்கேஜிங் மற்றும் பொது கொள்முதல் கொள்கை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.
இதுவரை மூவாரயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி பெற்றுள்ளனர்.இதில் 2100 க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.படித்த, படிக்காதவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைப்பதாக இந்த நிறுவனத்தின் முதல்வர் தெரிவித்தார்.