• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொழிலாளி உட்பட 2 பேர் தற்கொலை

January 24, 2022 தண்டோரா குழு

கோவையில் தொழிலாளி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் வசிப்பவர் காளிராஜன் (31). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. காளீஸ்வரி (28) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இதனை நினைத்து காளிராஜன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட விரத்தியில் அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் நாகராஜ் (61). மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாலாங்குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உயிரை காப்பாற்றினர்.

இந்நிலையில், சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க