• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

August 4, 2022 தண்டோரா குழு

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகன் காசிராஜன் (35), மற்றும் பரமன் என்பவரது மகன் முருகசாமி (32). ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இந்த இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், எச்சரிக்கை விடுத்தும், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிராஜன், மற்றும் முருகசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.இதையடுத்து இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க