• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் கண்காணிக்க 30 இடங்களில் தீவிர வாகன தணிக்கை

January 6, 2022 தண்டோரா குழு

ஒமைக்கிரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு அறிவித்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் கோவை மாநகரில் அமலுக்கு வந்தன. கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் கண்காணிக்க 30 இடங்களில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த நேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோவையில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததுள்ள நிலையில் மாநகர் முழுவதும் 700க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநகரில் அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் கண்காணிக்க 30 இடங்களில் வாகன தணிக்கைகாக தடுப்புகளை கொண்டு தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்க 23 ரோந்து வாகனங்களும், 44 இருசக்கர வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர மாநகர எல்லை பகுதிகளில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை இல்லை என்பதால் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து நகர மற்றும் வெளியூர் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன. டவுன்ஹால்,வெரைட்டி ஹால் ரோடு ஒப்பணக்கார வீதி,காந்திபுரம், கிராஸ்கட் சாலை, நூறடி சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில் 10 மணிக்கு கடைகளை மூடுமாறு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் வணிக நிறுவனங்கள் வியாபாரம் செய்வோர் ஆகியோர் அனைவரும் 10 மணிக்கு முன்பாக தங்களது வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை அடைத்து விடவேண்டும் என்றும், அத்தியாவசியப் பணி, மருத்துவ உதவிகோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க