March 3, 2018
தண்டோரா குழு
கோவை PPG தொழில் நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கு இன்று(மார்ச் 3)நடைபெற்றது.
கோவையை அடுத்த சரவணம்பட்டியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கு நடைபெற்றது.கருத்தரங்கை கல்லூரி தலைவர் தங்கவேலு துவக்கி வைத்தார்.இந்த கருத்தரங்கில் 150 க்கும் மேற்பட்ட பொறியியற்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள், தொழில்நுட்ப வினாடிவினா, Mr . மெக்கானிக், தொழில்நுட்ப குறும்படம், water rocketry ,இன்ஜின் பிரித்தல் மற்றும் சேர்த்தல் மற்றும் தொலைவியக்கி கார் பந்தயம் ஆகிய துறைகள் குறித்த போட்டிகள் நடைபெற்றன.
மேலும்,இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பொறியாளர். திரு. S . முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி, லட்சுமி ஆகியோர் பங்கேற்று மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோர்களாவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூபாய் ஐம்பதாயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .