April 16, 2020
தண்டோரா குழு
நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையில் தங்களின் உயிரை பணையம் வைத்து பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட இக்கரைபோலுவாம்பட்டி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அசைவ உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைக்கட்டுப்படுத்தும் பொருட்டு மருத்துவ குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் பலர் தங்களின் உயிரை பணையம் வைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் இக்கரை போலுவம்பட்டி கூட்டுறவு சங்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று தூய்மை பணியாளர்களுக்கு கோழி இறைச்சி,முட்டை போன்ற புரதச்சத்துள்ள அசைவ உணவு வழங்கி மகிழ்ச்சிபடுத்தினர்.
இதைத்தொடர்ந்து பேசிய கூட்டுறவு சங்க தலைவர் ராமமூர்த்தி,
வீட்டிற்கு தேவையான ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.மேலும் தூய்மை பணியாளர்களின் பணிகளுக்கு அவர் நன்றிகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இக்கரை போலுவம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ராஜ் என்கிற ராமமூர்த்தி, இக்கரைபோலுவம்பட்டி அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜி,கே விஜயகுமார், இக்கரைபோலுவம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் சதானந்தம், கூட்டுறவு சங்க வீ.சி எஸ்.கே கனகராஜ், ஊராட்சி செயலாளர் ராஜாமணி, மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.