February 16, 2018
தண்டோரா குழு
கோவை ஜிஆர்டி கல்லூரி மாணவ மாணவிகள் “சுவச்சத்தான் மாரத்தான்” என்ற தூய்மைபடுத்தும் பணியை மேற்கொண்டனர்.
பாரத பிரதமர் மோடியால் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் தூய்மையாக வைத்துகொள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும்,இந்த நிகழ்வை மக்களுக்கும் பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை அவினாசி சாலையில் உள்ள ஜிஆர்டி கல்லூரி சார்பில் “சுவச்சத்தான்” தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 2.5கிலோமீட்டர் வரை சாலை ஓரங்களில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.