• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் துவங்கிய இன்ஜினியரிங் கண்காட்சி

March 4, 2020

கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் இன்ஜினியரிங் கண்காட்சியில் தொழில்துறை அமைச்சர் சம்பத், கிராமப்புற தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெஞ்சமின்,

இந்தியாவில் மும்பையில் மட்டுமே நடந்து வந்த இந்த சர்வதேச கண்காட்சி, கடந்த 4 முறை தென்னிந்தியாவிலும், இந்தாண்டு கோவையில் நடத்துவதற்கு நன்றி.
தகவல் தொழில் நுட்பவியல், பம்ப்செட், கிரைண்டர், ஜவுளி, ஆட்டோமொபைல் ஆகிய பல்வேறு தொழில் துறையில் முன்னணியாக உள்ள கோவையில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பு. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் போட்டி சூழலை சமாளிக்கும் வகையிலும், பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 11,508 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களால் 17,810 கோடி ரூபாய் முதலீடுகளும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் 36 தொழிற் பேட்டைகள் அறிவிக்கப்பட்டதில், 23 தொழிற் பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் 1,06,368 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த கண்காட்சி, எம்.எஸ்.எம்.இ, நிறுவனங்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் என்று நம்புகிறேன். எம்.எஸ்.எம்.இ.க்கு இந்த கண்காட்சியில் 120 அரங்குகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத்,

தொழில்நுட்ப மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், பாரம்பரிய தொழிற்துறை மேம்பாட்டிற்கும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.பொறியியல் ஏற்றுமதியில் தமிழகம் 3 வது இடத்தை தக்க வைத்துள்ளது. நாட்டிலேயே எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளது. இராணுவ தளவாடங்கள், ஏரோ ஸ்பேஸ் தொழிற்துறை ஏற்றுமதியிலும் தமிழகம் முன்னணி வகிக்கிறது. நேனோ தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் தொழில்துறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.நாட்டில் 2 வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.2019 முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதில், 59 திட்டங்கள் துவங்கப்பட்டு விட்டது, 209 செயல்படுத்தும் நடவடிக்கையில் உள்ளது. 88.15% பணிகள் வெற்றியை யடுத்து. 63 புதிய திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. புதிய நிறுவனங்கள் பதிவு முழுவதும் இணையதளம் மூலம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையை இணைத்தும் இண்டஸ்ட்ரியல் காரிடரை பிரதமர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி.இராணுவ இண்டஸ்ட்ரியல் காரிடாருக்கென பிரத்யேக சிறப்பு செல் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.சென்னைக்கு அடுத்து கோவை நகரில் தொழில் வளர்ச்சிக்கு என அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.சி. சம்பத்,

இந்த கண்காட்சியில் மொத்தம் 467 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.47 நாடுகள் பங்கேற்றுள்ளன.
மோட்டார் பம்ப்செட், ஆட்டோமொபைல், இராணுவம் ஆகிய துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள் கோவையில் அதிகளவில் உள்ளது.சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் 80 கோடி மதிப்பீட்டில் பையோ-டெக் பார்க் 12 மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் இராணுவ தொழிலுக்கென புதிய செல் அமைக்கப்பட உள்ளது.உலக பொருளாதார மந்த நிலையிலும், தமிழ்நாடு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக உள்ளது.முதல்வர் வெளிநாட்டு சுற்று பயணத்தினால் 8035 கோடி முதலீட்டில் 41 நிறுவனங்கள் வந்துள்ளது எனவும் 26 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது கொரோனா பாதிப்பால் பொள்ளாச்சி தென்னை நார் தொழிற்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடர்பாக துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள் மூலம் முதல்வரிடம் 2 முறை கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இனிமேல் பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க