• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துவங்கியது 17 வது உலகத் தமிழ் இணைய மாநாடு

July 6, 2018 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 17 வது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று துவங்கியது.

உத்தமம் என்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் 1997 ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்திவருகிறது.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 17வது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று துவங்கியது.இன்று துவங்கிய இம்மாநாடு வருகிற 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.“அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு,மக்கள் அரங்கம்,கண்காட்சி அரங்கம்,பயிற்சி பட்டறை என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது.

மாநாட்டு,ஆய்வரங்கத்தில் இயல்மொழிப் பகுப்பாய்வு,இயந்திர மொழிபெயர்ப்பு,தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள்,இணைய பாதுகாப்பு,தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் வகுப்பறைகள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் வழங்க உள்ளனர்.

இம்மாநாட்டில்,சுவிட்சர்லாந்து,ஐக்கியநாடுகள்,ஜெர்மனி,பிரான்ஸ்,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலிய,சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை போன்ற நாடுகளிலிருந்து 160 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அதைபோல்,பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்,முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் உட்பட உலகளவில் இருந்து 9 முக்கிய தமிழ்அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்,மக்கள் அரங்கத்தில் பொதுமக்களுக்கும்,மாணவருக்கும் அலைபேசிகளுக்கான தொழில்நுட்பம்,ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம்,முப்பரிமாண அச்சு,குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி கணினி சார்ந்த பயிற்சிகள்,இணையம் சார் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்பட உள்ளது. அதைபோல்,கண்காட்சி அரங்கில் மழலையர் பள்ளியிலிருந்து,பல்கலைக்கழகம் வரை எல்லோரும் பயன்பெறும் வகையில் பலகைக் கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ்க் கருப்பொருளுடன் விற்பனைக்குக் வைக்கபட்டுள்ளன.

மேலும் படிக்க