April 8, 2020
தண்டோரா குழு
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காலில் விழுந்து வணங்கிய பி.ஜே.பி கட்சியினர்.
கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல துறையினர் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பி.ஜே.பி கட்சியினர் மாவட்ட செயலாளர் விவேகனந்தன் தலைமையில் பேரூராட்சியில் உள்ள அலுவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்கள் கால்களில் மலர்கள் தூவி பாதபூஜை செய்து காலில் விழுந்து வணங்கினர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.