• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திறக்கப்பட்ட கல்லூரிகள் – மாணவ, மாணவிகள் உற்சாகம்

February 8, 2021 தண்டோரா குழு

நீண்ட இடைவெளிக்கு பின் கொரோனா கட்டுப்பாடுடன் இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கொரோனா காரணத்தால் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடேயே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.பெருந்தொற்றின் பரவல் அதிகமானதால் பாதுகாப்பு கருதி பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக ஆன் லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ந்து சுமார் 10 மாதங்களாக மாணவ, மாணவிகள் வீட்டில் இருந்தவாறு செல்போன் மூலம் படிப்பை தொடர்ந்தனர்.நேரடியாக பள்ளி கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் செல்போன் மூலம் கல்வி கற்பது உளவியல் ரீதியான பிரச்சனைகள் மாணவர்கள் சந்திக்க கூடும் என்றாலும், கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டது. இந்நிலையில் இன்று 8 ஆம் தேதி முதல் 9 , 11 வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டன மாணவ, மாணவிகளிடையே உற்சாகமாக வந்தனர்.

மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரியில் வகுப்புகள் நடைபெற உள்ளதால், கிருமி நாசினிகள் தெளித்து தொற்று நீக்கம் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய நூலகம், பொது இடங்கள், உணவு கூடங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. பொது கழிவறைகள் கிருசி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க