• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள் !

March 29, 2023 தண்டோரா குழு

கோவையில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் ஒன்றில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகளை வழங்கிய தம்பதிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்.பாரதி- வி.ஸ்ரீஜா என்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியினர் இருவரும் ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது திருமணத்தில் தாம்பூல பைகளுக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டன. மணப்பெண்ணின் உறவினரான(சித்தி) கவிதா என்பவர் பழநி பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி ஆவார்.

இவரது யோசனையின் படி வழக்கம்போல் வழங்கப்படும் தாம்பூல பைக்கு பதிலாக இந்த சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டன.இதில் கருப்பு கவுனி லட்டு,திணை லட்டு, பாசிபயிறு லட்டு, கேழ்வரகு லட்டு, நரிப்பயிறு லட்டு, கம்பு லட்டு, கடலை உருண்டை என ஏழு வகை சிறுதானிய லட்டுகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் சிறுதானிய ஆண்டை குறிப்பிடும் விதமாகவும் ஆரோக்கியதை பேணும் வகையிலும் இந்த திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டுகள் வழங்கப்பட்டதாக திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இவர்களது இந்த முயற்சி திருமணத்திற்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க