November 17, 2017
தண்டோரா குழு
கோவையில் திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச்சிகிச்சை முகாம் இன்று(நவ 17) நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, மாவட்ட முன்னோடிகள் வங்கி ஆகியவை இணைந்து திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச்சிகிச்சை முகாமை நடத்துகின்றனர்.இந்நிகழ்ச்சி கோவை இராமலிங்கம்காலனி திருமணமண்டபத்தில் இன்று(நவ 17)
நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கையர்களின் வாழ்வை வளமூட்டும் வகையிலும், சமூக பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்றவும்,சுயசார்பு அடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும்,திருநங்கையர்களின் திறன்களை அறிந்து அதற்கேற்றவாறு இலவச பயிற்சி அளிக்கப்படுவதுடன். பயிற்சிக்குபின் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் கடனுதவி பெற வழிகாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டதைச் சேர்ந்த திருநங்கையர்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை மெருகேற்றி கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.