April 15, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பொதுமக்களிடம் செல்போன்களை வழங்கினார்.
திருடுபோன விலையுயர்ந்த 50க்கு மேற்பட்ட செல்போன்கள் பொதுமக்களிடம் கொடுப்பட்டது.
பின்னர் பொதுமக்களிடம் பேசிய காவல் கண்கணிப்பாளர்,
இதுவரை 1660 செல்போன்கள் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், திருடுபோன செல்போன்கள் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவும் மாவட்டத்தில் இன்னும் 400 செல்போன்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
பின்னர் பொதுமக்கள் தாமக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் எனவும் தொலைந்த செல்போன்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.திருடுபோகும் செல்போன்கள் மூலம் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.