June 6, 2018
தண்டோரா குழு
திருக்கோயில் பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரைக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்க வேண்டும்,ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள டாடாபாத் பகுதியில் திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,தங்களது கோரிக்கைகள் குறித்து பல முறை மனு அளித்தும் அறநிலையத் துறை ஆணையர் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.ஊதிய முரண்பாடுகளை அகற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.