March 31, 2021
தண்டோரா குழு
வாக்களர்களுக்கு பணம் வினியோகம் செய்வதற்காக அதிமுகவினர் மஞ்சள் நிற டோக்கன் கொடுப்பதாக திமுகவினர் புகார் – திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவினர் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நியூ சித்தாபுதூர் பகுதியில் அதிமுகவினர் வீடுவீடாக பூத் சிலிப் அடிப்படையில் மஞ்சள் நிற டோக்கன்கள் வினியோகம் செய்து வருவதை திமுகவினர் பிடித்தனர். பின்னர் தேர்தல் ஆணையம் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மஞ்சள் நிற டோக்கன்களை பறிமுதல் செய்து தடுத்துள்ளனர். அதிகாரிகள் பூத் சிலிப் கொடுப்பது தவறு எனவும் இதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி எடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பின்னர் திமுகவின் 53 வது வட்ட செயலாளர் சசிகுமார் காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவை சேர்ந்த சந்தானம் மற்றும் சிவானந்தம் ஆகிய இரு நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி பணப்பட்டுவாடா நடைபெறமால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிங்காநல்லூர் திமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.