• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி அசத்தி வரும் தி.மு.க.வினர் !

May 27, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை தினமும் வழங்கி அசத்தி வரும் தி.மு.க.வினர்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.குறிப்பாக நோய் பரவலை தடுக்க விதித்துள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு கழக தொண்டர்கள்,மாவட்டந்தோறும் ஒண்றிணைவோம் வா என ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில் சாய்பாபா காலனியில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தி.மு.க.வினர் தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த்,மற்றும் தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ் ஆகியோர் தலைமையில் ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்,சமூக விலகலை கடைபிடித்து, தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை காவல்துறை மத்தியம் குற்றபிரிவு உதவி ஆணையர் பெரியசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.தொடர்ந்து என்.எஸ்.ஆர்.சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிப்போர், ஆதரவற்றோர் சுமார் ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க