• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாராமாக மாறி வரும் அவலநிலை

February 1, 2018 தண்டோரா குழு

கோவையில் தாய்ப்பால் கொடுக்கும் அறை சமூக விரோதிகளின் கூடாராமாக மாறி வரும் அவலநிலை உருவாகியுள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டம் உட்பட பல அரிய திட்டங்களை கொண்டு வந்தார்.இந்த திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போதைய தமிழக அரசின் மெத்தனமான செயல்பாட்டால் தாய் மார்கள் பாலூட்டும் அறை மூடிக்கிடக்கிறது.

பேருந்து நிலையங்களில் வரும் பயணிகள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டிய சூழல் இருப்பதால் மூடிக்கிடக்கும் இந்த அறையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும்,உக்கடம் , மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களிலுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது.

தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனத்தால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்பதை எப்போது உணரப்போகிறார்கள் ஆளும் வர்கத்தினர் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

மேலும் படிக்க