• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்தம் – 40 கிமீ. வேகத்திற்கு மேல் சென்றால் வீடு தேடி வரும் செலான்

July 28, 2023 தண்டோரா குழு

கோவை அவினாசி சாலையில்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிய தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்தப்படுள்ளது.

கோவை மாநகரில் ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பயன்பாட்டை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்த கேமராக்கள் கோவை அவினாசி சாலை,சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அபராதவிதிப்பு உரிய ஆவணங்களுடன் வாகன உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் கூறுகையில்,

கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்யவும் விபத்துக்களை தடுப்பதற்காகவும் கோவை மாநகர காவல் துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகரில் உள்ள அவிநாசி சாலை சத்தியமங்கலம் சாலை பாலக்காடு சாலை ஆகிய மூன்று முக்கியமான சாலைகளில் 3D ஸ்பீட் ரேடார் பொருத்திய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் 32 வாகனங்கள் வரை வேகத்தை நாம் கண்டறியலாம். இரவு நேரங்களில் கூட வண்டியின் எண்ணை பதிவு செய்ய முடியும்.

எனவே 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு உடனடியாக அபராதம் விதித்த இ- செலான் அனுப்பப்படும்.கோவை மாநகருக்குள் வாகனங்களை இயக்குபவர்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது தனி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட மாநகர காவல் துறையினர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க