January 12, 2021
தண்டோரா குழு
கோவையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் என்.ஜி ராமசாமி நினைவு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1956 ஆம் ஆண்டுகளில் ஜில்லா பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் ஊதியத்தை கொண்டு நிலம் வாங்கப்பட்டு என் ஜி ராமசாமி நினைவாக உயர்நிலை பள்ளி உருவாக்கி நடத்தி வரப்படுகிறது. இப்பளியின் தலைமை ஆசிரியர் சதாசிவன் மீது புகார் தெரிவித்து பாஞ்சாலை சங்கத்தின் தலைவர் ராஜாமணி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாவது,
அரசு சம்பளம் பெறும் தலைமை ஆசிரியர் சதாசிவன் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளிடம் முறைகேடுகளாக கட்டணத்தை வசூல் செய்து பல லட்சம் மதிப்பில் தலைமை ஆசியர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும்,இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தலைமை ஆசிரியர் பணியிடத்தில் இருந்து நீக்க வேண்டும் என குறிப்பிடபட்டிருந்தது.