January 23, 2018
தண்டோரா குழு
கோவையில் பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழக அரசு பேருந்து கட்டணங்களை 70 சதவீதம் உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதன் ஓரு பகுதியாக கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலம் வந்து மனு அளித்தனர்.
ஆடீஸ் வீதியில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து 4 மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்த அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா,மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அப்போது இந்த கட்டண உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்து இருப்பதாகவும் தமிழக அரசு இந்த கட்டண உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும்,இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.