April 14, 2018
தண்டோரா குழு
கோவையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
அதேபோல கோவையை அடுத்த பேரூர் பகுதியிலுள்ள பிரசித்திப்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் இன்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.அதிகாலையில் இருந்தே மாசணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.இதனையடுத்து முற்றிலும் பழங்கள் மற்றும் காய்கறிகளும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.டன் கணக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகளைகொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அம்மனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.