April 14, 2018
தண்டோரா குழு
கோவையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு,கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வருடந்தோறும் கோவையை அடுத்த காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் பெற்ற ரூபாய் நோட்டுக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட அலங்காரத்தை ஏராளமான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
மேலும்,இதற்காக காவல் துறையினரும் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருடந்தோறும் ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு வந்த நிலையில் ஆண்டுக்காண்டு அலங்காரம் செய்யப்படும் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பும் அதிகரித்திக் கொண்டே வருகிறது. வழிபாடுகள் முடிவடைந்த பிறகு இரவு அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு நோட்டுக்கள் திருப்பி அளிக்கப்படும்.