• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் மத்திய மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா

September 25, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் காந்திபுரம் 9 வது வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் மத்திய மாவட்ட தலைமை அலுவலகம், மற்றும் தமிழக கட்டட தொழிலாளர் & அமைப்புசார தொழிலாளர் மத்திய சங்கம் சேவை மையம் திறப்பு விழா அக்கட்சியின் மாநில தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் திறக்கப்பட்டது. முன்னதாக அலுவலகத்தின் முன்பு கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அக்காட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் குருஸ் முத்து பிரின்ஸ் தலைமையில் ஆனந்த்ராஜ் கோவை மத்திய மாவட்ட செயலாளர் ஆகவும், செல்வராஜ் மாவட்ட பொருளாளர் ஆகவும், மாதியூஸ் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆகவும், ரமா கண்ணன் மாவட்ட மகளிர் அணிசெயலாளர் ஆகவும், ஜெயபால் தமிழக கட்டட தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஆகவும், C. விஜயகுமார் அமைப்பு சாரா தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஆகவும், R. ஹரி ராமநாதபுரம் & சிங்காநல்லூர் பகுதி செயலாளர் ஆகவும், R. விஜயகுமார் கன்ணப்பநகர் பகுதி செயலாளர் ஆகவும், சரவணகுமார் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக அக்காட்சியின் மாநிலத் தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவருமான பொன் குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அனைத்து கோவை மாவட்டத்தின் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கட்சியின் மற்ற மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க