• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) மாவட்ட மாநாட்டின் 7வது பதிப்பு

January 3, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) கோவை மாவட்ட மாநாட்டின் 7வது பதிப்பு, ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் 7-வது மாவட்ட மாநாட்டை நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 7-ஆம் தேதி நடத்த உள்ளதாகத் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) கோவை மாவட்டப் பிரிவு அறிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த 1500 இளைஞர்கள் மற்றும் 2500 பெண்களை உள்ளடக்கிய 10,000 பிராமண சகோதர சகோதாரிகள் பங்கேற்கின்றனர்.

தாம்ப்ராஸ் கோவை மாவட்டத் தலைவர் என்.எஸ்.ரமேஷ், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் ஆகியோர் மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மாவட்டத்தில் வசிக்கும் பிராமணர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உண்மை நிலையை மதிப்பீடு செய்து, அவர்களில் எத்தனை பேர் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளனர்,குறிப்பாக சுயஉதவி இல்லாத பொருளாதாரத்தில் ஏழைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதே மாநாட்டின் மையமாக இருக்கும் என்றார்.

மேலும் எத்தனை இளைஞர்கள் கல்விக்காக பாடுபடுகிறார்கள் என்பதைத் தீர்மானித்து, அவர்களுக்கு அரசாங்கங்கள் அறிவித்துள்ள பலன்களைப் பற்றிச் சொல்லி, அதைப் பெறுவதற்கு அவர்களுக்கு வழிவகை செய்யப்படும்.

ஸ்ரீராம் மேலும் கூறுகையில்,

100க்கும் மேற்பட்ட வெற்றிகரமான கோயம்புத்தூர் தொழில்முனைவோரை பிராமண சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களின் கதையை நிகழ்வில் பங்கேற்கும் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பகிர்ந்து, அவர்களை தொழில்முனைவோராக ஆக்குவதற்கு ஊக்குவிப்பதாக கூறினார்.இந்த மாநாட்டின் மூலம் சமூகத்தின் இளைஞர்களின் தேவைகளை கண்டறிந்து எதிர்காலத்தில் இந்த தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அரசியல் பிரமுகர்கள் அர்ஜுன் சம்பத், பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோருடன் பாரதி பாஸ்கர், ரங்கராஜ் பாண்டே போன்ற முக்கிய பேச்சாளர்கள் பங்கேற்பார்கள். நடிகர்கள் டெல்லி கணேஷ், போஸ்கி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். கோவையைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஆர்.வி.ரமணியும் இந்நிகழ்ச்சியில் பேச்சாளராகப் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க