• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்

February 8, 2022 தண்டோரா குழு

ஆசிரியர் கவுன்சிலிங் நடைபெறும் நிலையில் பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியர்களை நியமனம் செய்ய கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்.

கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் இன்று ஆசிரியர் விருப்ப இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றிற்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. இந்நிலையில் கோவை சங்கர் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் முத்துக்கல்லூர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி அப்பள்ளியின் ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடைபெறும் கூட்டரங்கிற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சங்கர் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், முத்துக்கல்லூர் பள்ளியில் 7 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள துவக்க பள்ளி மற்றும் வால்பாறையில் உள்ள இரு துவக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும் வெள்ளலூர் பகுதியில் ஆரம்ப பள்ளி கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர். ஆகவே உடனடியாக அப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இவர்களின் போராட்டத்தால் கவுன்சிலிங் வந்த இதர ஆசிரியர்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க