March 19, 2018
தண்டோரா குழு
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கிடுவதிற்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்,அரசு மருத்துவர்களுக்கு பட்டய மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(மார்ச் 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கால நேரம் உட்பட ஒரே மாதிரியான வேலைப்பளுக்கள் இருந்தாலும்,மத்திய அரசின் மருத்துவர்களுக்கு மட்டும் அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் தங்களுக்கும் அவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட கோரிக்கை வைத்தனர்.
அதே போல், மருத்துவ பட்டயமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 % இடஒதுக்கீடை வழங்கிட வேண்டும் என்றும்,இந்த இட ஒதுக்கீட்டின் ரத்தால் அரசு மருத்துவர்களாக பணிபுரிவர்களின் எண்ணிக்கை சரிசமமாக குறையும் என்றும்,விளிம்பு நிலை மக்களுக்கு இதே போன்ற மருத்துவம் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு டாக்டர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.