• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழிசையை கண்டித்து பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 28, 2018 தண்டோரா குழு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூக நீதி போராட்டத்தை கொச்சை படுத்திய தமிழிசையை கண்டித்து பா.ம.க சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும்,தலைவருமான மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களின் சமுகநீதி மற்றும் இடஒதுக்கீடு போராட்டங்ககளை கொச்சைப்படுத்தும் விதமாகவும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை கொச்சைப்படுத்தி கருத்துக்களை பதிவிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறுகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாமக மற்றும் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

பாமக மாநில துணைதலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்,பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா  ராமதாஸ் அவர்களின் சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் மருத்துவர் அய்யாவின் போராட்டங்களை கொச்சைபடுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் எனவும் எச்சரித்தனர். இப்போராட்டதின் போது காவல்துறையினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்த மறுத்ததையடுத்து காவல்துறையினருடன் வாக்குவாததில் ஈடுபட்டனர்.இருப்பினும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி மறுத்ததால் ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் அறவழியில் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை பொதுசெயலாளர்கள் ரகுபதி,எஸ்.பி விசாலாட்சி,அல்போன்சா பாலு,மாவட்ட செயலாளர்கள் கொங்கு கிஷோர்,கணேஷ்,வெங்கடேஷ் காந்தி,சம்பத்,அஷோக்ராஜ் ப்ரதீப்குமார்,கோவை மாவட்ட தலைவர் குமார்,உள்ளிட்டோர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க