தொல்பொருட்கள் கண்காட்சி,தமிழக அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டார்.
கோவை வ.உ.சி. மைதானத்தில், தொல்லியல் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தொல்பொருட்கள் கண்காட்சி,தமிழக அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.இதில் கீழடி வைகை நதிக்கரையில் நகர நாகரிகம், பொருநை ஆற்றங்கரை நாகரிகம், கொடுமணல் சங்க காலத் தொழிற்கூடம்,மயிலாடும்பாறை 4200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலப் பண்பாடு, ஆகியவை குறித்த தொல்பொருட்கள் கண்காட்சி காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
அதே போல தமிழக அரசின் ஓராண்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் உள்ளிட்டவை விளக்கிடும் ஓவியக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் பார்வையிட்டார்.இந்த கண்காட்சி திறப்பு விழாவில் அமைச்சர்கள் தென்னரசு,சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி மற்றும் நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்றபின் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் பார்வையிட்டார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது