பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கோவையில் மகேந்திரா & மகேந்திராவின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர் சாரு சிண்டிகேட், தமிழகத்தின் முதல் பெண் பொக்லைன் வாகனம் இயக்கும் பெண் ஓட்டுநரை அறிமுகப்படுத்துகிறது.
மேலும் இந்தக் குழு தமிழகம் முழுவதும் கனரக வாகனங்களை கையாளும் துறையில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழகத்தின் முதல் பொக்லின் வாகனம் ஆப்பரேட்டர் அங்கால ஈஸ்வரி ஆவார்.
பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் கடின உழைப்பைக் கொண்டு இதனை கற்றுக் கொண்டுள்ளார். மிகவும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.
எதிர்காலத்தில் ஒரு நட்சத்திரமாக வலம் வருவார். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். சமூகத்தில் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
பெண் தொழில்முனைவோர் ருக்மணி சாமியப்பன் மற்றும் பாரதி சக்தி பாலாஜி பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசுகையில்,
பொக்லைன் வாகனம் ஆப்பரேட்டர் வேலைக்கு அதிக அளவு பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இப்பயிற்சி பெண்களை சமூகத்தில் உயர்த்த ஒரு காரணியாக அமைகிறது. வீட்டு வேலை மட்டுமே செய்து வரும் பெண்களை அவர்கள் விருப்பப்படி அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய தூண்டும் என்று நினைத்தோம். தொழில் முனைவோர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் தொழில் முனைவோர்கள்லால் நடத்தப்படுகிறது.
பொருளாதார முன்னேற்றம்,கல்வி, நகரமயமாதல்,கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அங்கீகாரம் ,ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகரித்துள்ளனர் என்றனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது