• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தன் எஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் !

January 20, 2020 தண்டோரா குழு

கோவை அருகே தோட்டத்தில் நுழைந்த விஷ பாம்புடன் மூன்று நாய்கள் சண்டையிட்டு, உரிமையாளரை காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் அருகேயுள்ள பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். அப்பகுதியில் அவர் வீட்டுடன் சேர்த்து விவசாய தோட்டம் உள்ளது. இந்நிலையில், இவர் தோட்டத்தில் மாடுகளுக்கு தீவணம் வைக்க தனது நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு சுமார் 6 அடி கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக வந்துள்ளது. இதனை பார்த்து ராமலிங்கம் அச்சமடைந்தார். அப்போது ராமலிங்கத்துடன் வந்த 3 வளர்ப்பு நாய்கள், பாம்புடன் சண்டையிட்டுள்ளது.

3 நாய்களும் சேர்ந்து பாம்பை கடித்து குதறி கொன்றது. பாம்புடன் சண்டையிட்டு வளர்ப்பு நாய்கள் உரிமையாளரை காப்பாற்றும் இந்த காட்சிகளை ராமலிங்கத்தின் நண்பர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் படிக்க