• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனுஷ் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

April 9, 2021 தண்டோரா குழு

தனுஷ் நடித்த கர்ணன் படம் இன்று வெளியானதை தொடர்ந்து காலை முதலே பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கோவை மாவட்ட தலைமை தனுஷ் மன்ற ரசிகர்கள் கொண்டாடினர்.

தனுஷ் நடித்த பட்டாஸ் படத்திற்கு பிறகு கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெளியானது கர்ணன் திரைப்படம். பரியேறும் பெருமாள் புகழ் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார்.பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,இன்று படம் வெளியாகி உள்ளதால்,கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பாபா காம்ப்ளக்ஸ் திரையரங்கம் முன்பாக,தனுஷ் ரசிகர்கள் காலை முதலே தியேட்டர்களில் பட்டாசுகள் வெடித்து கர்ணன் படத்தின் கொண்டாட்டத்தை வெறித்தனமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது குறித்து கோவை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சங்கர் கூறுகையில்,

தமிழ் புத்தாண்டு இப்போதே கொண்டாடுவதாகவும்,நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள படம் வெளியாகி உள்ளதால் திருவிழா போல இந்த நாளை கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,.தனுஷ் மன்ற நிர்வாகிகள், மணி, அருள் முருகன், அந்தோணி,வினோத், ராஜ் குமார், பழனிக்குமார்,ராஜசிங்கம், விக்னேஷ்வர் ராஜா, மணிகண்டன், ராஜேஷ் என தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் வெளியான நிலையில், கோவை வாழ் மக்கள் கர்ணன் திரைபடத்தை காண குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க