• Download mobile app
09 Dec 2025, TuesdayEdition - 3590
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை அறிவிப்பு

December 9, 2025 தண்டோரா குழு

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், வரும் சனிக்கிழமை (13.12.25) முதல் திங்கள் ( 15.12.25) வரை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை ஒப்பனக்கார வீதியில் அமைந்துள்ள தனிஷ்க் ஷோரூமில் நடைபெற்றது. இதில் இந்நிறுவனத்தின் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில் கூறியதாவது:-

டிசம்பர் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்கு தாஜ் விவான்தா ஹோட்டலில் காலை 11மணி முதல் இரவு 8 மணி வரை இந்த உயர் ரக வைர நகை கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் 500க்கும் அதிகமான டிசைன்களில் வைர நகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.இவை அனைத்தும் திருமண சீசனுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டவைகளாகும்.
“தனிஷ்க் வைர நகைகள் முழுக்க முழுக்க இயற்கை வைரங்கள். வைரங்களின் கட் மற்றும் தெளிவுதன்மை மிக நேர்த்தியாக இருக்கும்,” என சிவரஞ்சனி தெரிவித்தார்.

இந்த கண்காட்சியை காணவரும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும்படி சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நகையை அன்றே வாங்கலாம் அல்லது அதன் 50% கட்டணத்தை செலுத்தி அந்த நகையை அன்றைய விலைக்கு முன்பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். மீதம் நகைக்கான கட்டணத்தை நகையை பின்னர் வாங்க வரும்போது செலுத்தலாம்.

தங்களின் பழைய தங்கத்தை வைரமாக மாற்றும் வசதியும் இந்த கண்காட்சியில் இடம்பெறும். அதன்படி, தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப வைர நகைகளை பெற்றுக்கொள்ளலாம். (ஜி.எஸ்.டி., மற்றும் இதர கட்டணங்கள் தனி).

இதே நிகழ்வில் தனிஷ்க்-கின் பிரத்தியேக வைர நகைகளுக்கான காரட் மீட்டரும் இடம்பெறும். இதில், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய வைர நகைகளின் தரத்தை அறிந்துகொள்ளமுடியும். இத்துடன், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொண்டு தனிஷ்க் செய்துள்ள பிரத்தியேக அரங்கில் முதல் இரண்டு நாட்கள் நகைகளுடன் ராம்ப் வாக் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், திருமண நகைகள் வாங்கும் பெண்ககளுக்கு சிறப்பு பிரைடல் போட்டோ சூட் – இந்த பிரத்தியேக அரங்கில் செய்து கொடுக்கப்படும்.இவையெல்லாம் இந்த 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு என கூறினர்.

மேலும், தனிஷ்க்-கில் வாங்கிய பழைய வைர நகைகளையும் கூட அதன் தற்போதை ,மதிப்புக்கு ஏற்ப இந்த நிகழ்வு நாட்களில் மாற்றிக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க