June 10, 2019
தண்டோரா குழு
கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவனை பள்ளியில் சேரத்து விட்டு தற்போது கட்டண வசூலில் ஈடுபட்டிருக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வளர்ப்புத்தாய் மனு அளித்தார்.
கோவை வீரபாண்டி பிரிவு பகுதியைச்சேரந்தவர் ஜெயா .கோவை மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது சகோதரின் மகனுடன் வந்த இவர் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் தனது சகோதரன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விடவே அவரது இரு மகன்களையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் சகோதரனின் மூத்த மகனான ஆன்ரோசனை(4) ல் கட்டாய கல்வி உரிமைசட்டத்தின் கீழ் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சேரத்தாகவும் அதன்படி யூ.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசகல்வி வழங்கப்படும் என அந்த பள்ளியின் அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தாகவும் கூறப்பட்டிருந்தது.இந்த ஆண்டு எல்.கே.ஜி வகுப்பில் தொடர பள்ளி நிர்வாகத்தினர் 30,000 ரூபாய் கேட்பதாகவும், இலவச கல்வி என்று கூறிவிட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைக்காக ஏற்கனவே பணம் செலுத்தி விட்ட நிலையில் தற்போது கல்வி கட்டணம் கேட்கப்பட்டுகிறது.
ஆகவே ஆன்ரோசனை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் இலவச கல்வி என்று கூறிவிட்டு தற்போது கட்டணம் வசூலிக்கும் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.