October 15, 2021
தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுரி மனோகரி (44). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் சம்பவத்தன்று ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரத்திற்கும், பின்னர் அங்கிருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றார்.
அப்போது பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் நைசாக கவுரி மனோகரி மணிபர்சை திருடி சென்றுள்ளனர். அதில் 2 பவுன் தங்க நகை, ரூ.2 ஆயிரம், ஏடிஎம் மற்றும் லைசென்ஸ் உள்ளிட்டரை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுரி மனோகரி இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.